கொடை நிகழ்ச்சித்திட்டம்



திருகோணமலையின் மூதூர் பிரதேசத்திலுள்ள பாட்டாளிபுரம் கிராமத்திற்கு திருகோணமலை ரோட்ராக்ட் கழகத்தினால், ரோட்டரி கழகத்துடன் இணைந்து கொடை நிகழ்ச்சித்திட்டம் “ஈதலே நன்று” எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திருமலை நகர் சமூகத்திடமிருந்து ஆடைகளும் புத்தகங்களும் பெருவாரியாக சேகரிக்கப்பட்டன. வறுமையினால் வாடும் பாட்டாளிபுரம் மக்களுக்காக பலரும் மனமுவந்து நன்கொடைகளை வழங்கியிருந்தனர்

2021 ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் திகதி அன்று ரோட்ராக்ட் கழகத்தினர் பாட்டாளிபுரம் கிராமத்திற்கு சென்று சேகரித்த பொருட்களை கையளித்தனர் இத்திட்டத்தின் மூலம் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்தனர்.

திருகோணமலை ரோட்டரி கழக செயலாளர் திரு பிரபாகரன், ரோட்டரி கழக அங்கத்தவர் திரு. ரகுராம், ரோட்ராக்ட் கழக தலைவர் திரு. ஜீவ குஹகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

திருகோணமலை ரோட்ராக்ட் கழகத்தினரால் முன்னரும் மனிதம் நிகழ்ச்சித்திட்டம் மூலம் திருமலை நகரில் உள்ள வறியவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :