J.f.காமிலா பேகம்-
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு இராஜியம் விதித்த தடையானது வருகின்ற ஓகஸ்ட் 07ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டுபாய் தலைமையாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய, இலங்கை உட்பட நாடுகளின் பயணிகள் விமானங்களுக்கு இந்த தடையுத்தரவு அமுலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த 14 நாட்களிற்குள் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தொடர்புகொண்டிருந்த நபர்கள் ஐக்கிய அரபு இராஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ReplyForward

0 comments :
Post a Comment