வீட்டிலிருந்து வேலைக்கு வெளிக்கிடும் போது மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை உறவுகளிடம் ஊடகவியலாளர்கள் என்ன சொல்லிப் புறப்படுகின்றனர். “அலுவலகத்துக்குச் செல்கிறேன், மாலையில் வந்துவிடுவேன்” என்கின்றனர். ஆனால், உறவுகளிடம் சொல்லும் போதிருந்த மனச்சாட்சி, இவர்களுக்கு அலுவலகத்தில் இல்லாதிருக்கிறது. இவர்களின் தொழில் தர்மங்களை அரசியல் காரணிகள் ஆக்கிரமிப்பதால் இந்நிலை ஏற்படுகிறதா? சமூக அங்கீகாரம் பெற்ற தனிப்பட்ட ஒரு குடும்பத்தைக் குறிவைப்பதையா இவர்களின் தர்மங்கள் விரும்புகின்றன? இல்லாத ஒன்றுக்காக இவர்களின் குடும்பங்கள் குறிவைக்கப்பட்டால், இந்த ஊடகங்களின் உணர்வலைகள் எவ்வாறிருக்கும்? உண்ணவும், உடுக்கவும், வாழவும், மகிழவும்தான் எமக்கு வருமானம் தேவைப்படுகிறது. இந்த வருமானத்திலேயே எமது உறவுகளும் வாழ்கின்றன. இந்த வாழ்வு தர்மத்தின் சாயலில் செல்வதையே நாம் விரும்ப வேண்டும்.
சமூகங்களை வேறுபடுத்தும் சில சிங்கள ஊடகங்களின் மனோநிலைகளைக் கொப்பியடித்துக் கொண்டு, செய்திகளை வெளியிடுவதுதான் வேதனை. நீதிமன்றம் தீர்ப்புச் சொல்வதற்கு இடையில், இந்த இழிசெயல்களையும் கற்பனைச் சிருஷ்டிப்புகளையும், நமது மொழி ஊடகங்களில் சில நிறுத்திக் கொள்வதையே சகோதரச் சமூகம் எதிர்பார்க்கிறது.
-நல்லிணக்க நலன்விரும்பிகள்-
0 comments :
Post a Comment