எம்.எம்.ஜபீர்-
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு பூராகவும் இந்நிகழ்வு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி திறனை விருத்திசெய்யும் வகையில் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்த நிகழ்வு அப்துல் மஜீட் மண்டபத்தில இன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசியக் கொடி இயற்றப்பட்டு அலுவலக உத்தியோகத்தர்களின் உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டல் நிகழ்வும் நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.சப்றி நிஸாரின் நெறிப்படுத்தலில் உடற் பயிற்சி நிகழ்சி இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முகம்மட், பிரதேச சபை உறுப்பினர்களான என்.கோவிந்தசாமி, எஸ்.எம்.எஸ்.நிலுவ்பா, கே.எல்.இன்பவதி, கே.குலமணி, நிதி உதவியாளர் ஏ.ஜெ.எம்.ஜெசீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்; கலந்து கொண்டனர்.
ஓலிம்பிக் போட்டியின் போது திரு.டங்கன் வைட் வெள்ளிப் பதக்கம் மொன்றை வென்றெடுத்த தினத்தை ஒவ்வொரு வருடமும் நினைவுகூரும் வகையில் இவ்வருடம் தொடக்கம் தேசிய விளையாட்டு தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை பொது சேவைகள் மகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மேற்கொண்டுள்ளதுடன், ஆரோக்கியமான அரச சேவை சந்ததியொன்றை உருவாக்குவதன் மூலம் வினைத்திறனும், உற்பத்தி திறனும் கொண்ட அரச சேவையை உருவாக்கும் நோக்குடன் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment