கொத்துரொட்டியும், கொரோனா தடுப்பூசியும். விடை தெரியாத சில சந்தேகங்கள்.



மது நாட்டில் ஏற்றப்படுகின்ற கொரோனா தடுப்பூசிகளில் பெரும்பாலானவை அன்பளிப்பு அல்லது இலவசமாக அனுப்பப்பட்டவைகள்.

இலவசம் என்பதனால் அதன் பெறுமதி தெரிவதில்லை.

இருந்தாலும், உரிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்தவர்கள் தனது நாட்டு மக்களுக்கு வழங்கிய தரத்தினைப்போன்று வறிய நாடுகளுக்கு இலவசமாக அனுப்பிய மருந்துகளின் தரம் குறைவடையாமல் இருக்குமா ?

பெருமைக்காக அல்லது இலங்கை போன்ற வறிய நாடுகளின் வேண்டுகோள்களை மறுக்க முடியாமல் இலவசமாக அனுப்பும் நோக்கில் போலியாக உற்பத்தி செய்தவைகளாக இருக்குமா ?

அல்லது இலவசமாக அனுப்புதல் என்று காண்பித்துக்கொண்டு அதே பெயரில் வேறு புதிய உற்பத்திகளை மூன்றாம் மண்டல நாட்டு மக்களுக்கு வழங்கி மறைமுகமாக பரீட்சிக்கும் தந்திரோபாயமா ?

ஆபிரிக்கா கண்டத்தில் வாழுகின்ற மிக வறிய மக்களைக்கொண்டே கடந்த காலங்களில் ஏராளமான தடுப்பூசிகள் பரீட்சிக்கப்பட்டது. இதற்கு உலக சுகாதார ஒன்றியம் ஒத்துழைத்தது.

ஆனால் இன்று பதவி வகிக்கின்ற உலக சுகாதார ஒன்றியத்தின் தலைவர் ஆபிரிக்கா கண்டத்தை சேர்ந்தவர் என்பதனால், கொரோனா தடுப்பூசிகள் எதுவும் ஆபிரிக்க மக்களைக்கொண்டு பரீட்சிக்க முடியவில்லை.

அண்மையில் 16 இலட்சம் தடுப்பூசிகளை எமது உயிர் நண்பனான சீனா அன்பளிப்பு செய்தது. அதனை திறந்துகூட பார்க்காமல் அப்படியே வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் அனுப்பியுள்ளது.

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியதிலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் பேசும் மக்களின் இன பரம்பலை குறைப்பதற்காக சிங்கள குடியேற்றங்களை நிறுவியுள்ளனர். அந்த முயற்சி தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இன்னமும் விஸ்தரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில், முஸ்லிம் ஹோட்டல்களில் வழங்கிய கொத்துரொட்டிகளில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டது என்று பேரினவாதிகள் சந்தேகித்தது மட்டுமல்லாமல், நாட்டையே ஒரு கலக்கு கலக்கினார்கள். அதுபோன்று, சீனாவினால் விஷேடமாக அனுப்பப்பட்ட 16 இலட்சம் தடுப்பூசிகளில் ஏதும் சிக்கல்கள் இருக்குமா ?

கொத்துரொட்டிகளில் கருத்தடை மாத்திரை கலக்க முடியுமென்றால், தடுப்பூசி மூலம் முடியாதா ? பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் வழங்கிய தடுப்பூசிகளை பாலஸ்தீன ஆணையம் ஏற்க மறுத்ததுடன், அதனை ஏன் திருப்பி அனுப்பியது என்று சிந்தித்தோமா ? என்ரெல்லாம் நாங்கள் சந்தேகிப்பதில் ஏதும் தவறு உள்ளதா ?

இருந்தாலும், வேறு வழியில்லை. தடுப்பூசியை ஏற்றியே ஆகவேண்டும் என்பது எமக்கு காலம் விதித்த கட்டளையாகும். எனவே ஏராளமான சந்தேகங்களுக்கு மத்தியில் தடுப்பூசியை ஏற்றுவோம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :