மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேச எல்லை நிர்ணயத்தில் மோசடிகள் இடம் பெற முயற்சிகள் எடுப்பது தமிழ், முஸ்லிம் உறவைக்குலைக்கும் செயலாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான கா. மு. மழ்ஹர்தீன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏறாவூரின் எல்லையை களவாடுவதற்கான முயற்சியை மேற்கொள்வதை நாம் கண்டிப்பதுடன் இந்த மோசடி நடக்க விடாமல் தடுக்க மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் முன் வர வேண்டும். இவ்வாறு மோசடி நடைபெற்றால் நீதி மன்றில் வழக்குத் தொடரவும் நாம் தயார். .
தற்போது மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் திட்டமிட்டு கொண்டிருக்கும் எல்லை நிர்ணயமானது முஸ்லீம் சமூகத்தின் வளங்களை குறைப்பதற்கான சதித் திட்டமாகும். இங்கு தொடர்ச்சியாக முஸ்லீம்களுக்கு எதிரான நிருவாகப்பயங்கரவாத நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.
ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மட்டு மாவட்டத்தில் ஒருவர் மாத்திரமே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிக்கு மட்டக்களப்பு முஸ்லிம்கள் வாக்களிக்காமையின் துயரம் இன்று நம்
கண் முன்தெரிகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை சமூகத்திலும் சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லீம்களுடைய வளங்களை திட்டமிட்டு சுரண்டுவதற்கு இடமளிக்க முடியாது.
எல்லை நிர்ணயங்களை தங்களது வசதிக்கு ஏற்ப பிரிக்க அனுமதிக்காமல் முஸ்லீம் தலைவர்களின் அனுமதியுடன் அது நடைபெற வேண்டும். இ்ல்லாவிட்டால் சகல விடயங்களையும் ஆய்வு செய்யும் எல்லை நிர்ணய குழுதான் இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தின் சகோதர கட்சி என்ற அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம்.

0 comments :
Post a Comment