கொடிய நோய் நீங்கி சுபீட்சம் மலரப் பிராத்திப்போம்;மு.கா.பதில் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல்



அஸ்லம் எஸ்.மௌலானா-
லகையும் எமது தாய் நாட்டையும் சூழ்ந்துள்ள கொடிய வைரஸ் நோயில் இருந்து விடுபட்டு சுபீட்சம் மலர இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனை பிராத்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதில் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அறைகூவல் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இஸ்லாத்தின் இறுதிக் கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய திருப்தியில் யாத்திரிகர்கள் 'ஈதுல் அழ்ஹா' தியாகத் திருநாளை கொண்டாடும் இவ்வேளையில், உலகளாவிய முஸ்லிம் உம்மத்துடன் ஒன்றிணைந்து இலங்கை முஸ்லிம்களாகிய நாங்களும் இந்தத் திருநாளைச் சந்திக்கின்றோம்.

நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தின் சிறப்பை வலியுறுத்தும் 'ஈதுல் அழ்ஹா' பெருநாளை பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் கொண்டாடுகின்றனர்.

உலகையும் எமது தாய்நாட்டையும் சூழ்ந்துள்ள கொடிய வைரஸ் நோயில் இருந்து விடுபட்டு சுபிட்சம் மலர இப் புனித திருநாளில் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :