"தெரிவு செய்யப்பட்ட 651 அரச பாடசாலைகளில் உயர்தரப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் (தத்தல்) கணனிகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் : கட்டம்-1"



திமேதகு ஐனாதிபதி அவர்களின் மேற்குறித்த கருத்திட்டத்தில் பாடசாலை முறைமையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாக டிஜிட்டல் (இலக்க) கற்றல் ஆதாரங்களை பயன்படுத்துவதன் மூலமான கற்பித்தலுக்காக ஆசிரியர்களுக்கும்,

 மாணவர்களுக்கும் டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வு 2021.07.26 ஆம் திகதியன்று காலை 11.00 மணியளவில் தி/தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் S. ஸ்ரீதரன் அவர்களது தலைமை மற்றும் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. 

குறித்த நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ. கபில நுவான் அத்துகோரல அவர்களும், கௌரவ அதிதியாக கந்தளாய் வலயக்கல்விப் பனிப்பாளர் E.G.P.I. தர்மதிலக அவர்களுக்கும் மற்றும் விசேட அதிதியாக கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் திருகோணமலை மாவட்ட இணைப்புச் செயலாளர் G. கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டு குறித்த நிகழ்வினை சிறப்பித்திருந்தனர் . 

குறித்த தருணம் அசாதாரண கால சூழ்நிலையில் இணையவழிக் கற்கையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக திருகோணமலை கல்வி வலயத்தின்கீழ் தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உயர்தரப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கான 844 டெப் கணனிகளும், ஆசிரியர்களுக்கான 103 டெப் கணனிகளும் சேர்த்து மொத்தமாக 947 டெப் கணனிகள் மற்றும் அதனோடு இணைந்த பாகங்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
குறித்த நிகழ்விற்காக முன்னின்று உழைத்த திருகோணமலை கல்வி வலயத்தின்கீழ் கடமையாற்றும் கல்வி சார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :