இன்றுமுதல் 30வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 5000தடுப்பூசிகள். காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி தஸ்லிமா அறிவிப்பு



வி.ரி.சகாதேவராஜா-
ன்று(29) வியாழக்கிழமை முதல் இரண்டாம்கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம், காரைதீவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

30வயதுக்கு மேட்பட்ட அனைவரும் எமது நேர அட்டவணைக்கமைய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் அறிவித்துள்ளார்.

முதலாம்கட்டத்தில் 3900 பேருக்கு சிறப்பாக தடுப்பூசி வழங்கியதன் காரணமாக இம்முறை 5000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும்.எனவே அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தல் ஒலிபெருக்கி மூலமும் ஊர்பூராக வழங்கப்பட்டுள்ளது.

எமது நாட்டிலும் ,எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும் மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும் முழு நாடும் பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி வழங்குவதால் மட்டுமே.

எமது பிரதேசத்தில் 2021.07.29 அதாவது இன்று வியாழக்கிழமை முதல் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலாரும் இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த முந்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்கள்

சண்முக மகாவித்தியாலயம்காரைதீவு
காரைதீவு:- 10,11,12 ஆகிய பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

பிரதேசவைத்தியசாலை காரைதீவு
. மூன்று மாதம் பூர்த்தியாகிய கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அலர்ஜி,தொற்றா நோய்களுக்கு உள்ளான 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

விக்னேஸ்வராவித்தியாலயம்காரைதீவு
. காரைதீவு 7,8,9 ஆகிய பிரிவுகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலரும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
காரைதீவுசுகாதாரவைத்தியஅதிகாரிகாரியாலயம்

 காரைதீவு 1,6,7 ஆகிய பிரிவுகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

அல்.அஷ்ரஃப்மஹாவித்தியாலயம்.

. மாவடிப்பள்ளியில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

தடுப்பூசிகள் யாவும் 7:30 மணிமுதல் பிற்பகல் 03.30 மணி வரை வழங்கப்படும். தடுப்பூசி பெற்றுக் கொள்ள வரும் போது தங்கள் பகுதி கிராம சேவகரிடம் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான சம்மதப்படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து வருவதுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (NIC) ஆள் அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுவரும் படி வேண்டப்படுகின்றீர்கள். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :