இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்ட
பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதில், இலங்கை சுற்றுலா அமைச்சு, வெளியுறவு அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (28) தெரிவித்துள்ளார்.
கொவிட் காரணமாக தற்போது 21 நாடுகள் இலங்கைக்கு பயணிக்கத் தடை விதித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே, பஹ்ரைன், நேபாளம், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கட்டார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் வெளியுறவு அமைச்சின் ஊடாக கலந்துரையாடலை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக உலகளாவிய ரீதியாக சிறப்பு ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயற்படுத்த, சுற்றுலா மேம்பாட்டு பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதன்பிரகாரம், ஆகஸ்ட் மாதம் முதல் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய சந்தையில் புதிய விளம்பரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் செயல்திட்டத்தை செயற்படுத்த அமைச்சில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment