இமாம், முஅத்தின்க‌ளுக்கான‌ வாழ்வாதார‌ங்க‌ளை வ‌ழ‌ங்கி வைக்க‌ அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவும் முஸ்லிம் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் முன் வ‌ர‌வேண்டும் .உல‌மா க‌ட்சிகொரோனா கார‌ண‌மாக‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ள், குர்ஆன் ம‌துர‌சாக்க‌ள் மூட‌ப்ப‌ட்டுள்ள‌தால் அங்கு ப‌ணியாற்றும் இமாம், முஅத்தின்க‌ளுக்கான‌ வாழ்வாதார‌ங்க‌ளை வ‌ழ‌ங்கி வைக்க‌ அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவும் முஸ்லிம் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் முன் வ‌ர‌வேண்டும் என‌ (உல‌மா க‌ட்சி) ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய‌ அமைப்பாள‌ர் முஹ‌ம்ம‌த் ச‌தீக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து, க‌ட‌ந்த‌ வ‌ருட‌த்தை விட‌ இம்முறை கொரோனா கார‌ண‌மாக‌ மிக‌வும் இறுக்க‌மான‌ நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து.

ப‌ல‌ மாத‌ங்க‌ளாக‌ அடிக்க‌டி ஏற்ப‌ட்ட‌ கொரோனா முட‌க்க‌ல் கார‌ண‌மாக‌ பள்ளிவாய‌ல், குர்ஆன் பாட‌சாலை இமாம், முஅத்தின்க‌ள் பெரும் க‌ஷ்ட‌த்தில் இருப்ப‌தாக‌ எம‌து க‌ட்சிக்கு கோரிக்கைக‌ள் வ‌ருகின்ற‌ன‌.

இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு உத‌வும்ப‌டி அர‌ச‌ மேல் ம‌ட்ட‌த்தையும் எம‌து க‌ட்சி கேட்டுக்கொண்டுள்ள‌து. அதே போல் அ.இ.ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா, ம‌ற்றும் சிவில் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் இந்த‌ மௌல‌விமாருக்கும் முஅத்தின்மாருக்கும் உத‌வ‌ முன் வ‌ர‌வேண்டும் என‌ நாம் கேட்டுக்கொள்வ‌துட‌ன் தேவைப்ப‌டின் அவ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளை வ‌ழ‌ங்கி வைக்க‌வும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌யாராக‌ உள்ள‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :