மீனவர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் ? அவசர உதவிகளை எவ்வாறு பெறுவது ? அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவார்களா ?மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு செல்வதானது போருக்கு செல்வதனை போன்றதாகும். பல மணித்தியாலங்கள் பயணம் செய்து அங்கிருந்து மீண்டும் திரும்பி வருவதற்கான எந்தவித உத்தரவாதமும் இல்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாய்ந்தமருதை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதன் காரணமாக அதில் பயணித்த நால்வரில் இரண்டுபேர் ஸ்தளத்தில் மரணித்தனர். ஏனைய இருவரும் காயங்களுக்குள்ளானதுடன் படகு சேதமடைந்தது.

காயங்களுக்குள்ளான இருவரும் சேதமடைந்த படகின் மூலம் கரையை நோக்கி வர முடியாமல் இரவு முழுவதும் உதவிக்காக ஓசையெழுப்பி தத்தளித்துக் கொண்டிருந்தும் அவர்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை.

மறுநாள் காலையில் தற்செயலாக வருகைதந்த இன்னுமொரு படகின் உதவியின் மூலமே காயமடைந்த இருவரும் காப்பாற்றப்பட்டு மரணித்த உடலும், மீன்பிடி படகும் கரையை நோக்கி கொண்டுவரப்பட்டன.

குறித்த படகு அங்கே தற்செயலாக வந்திருக்காதுவிட்டால், சேதமடைந்த படகு வேறு திசையை நோக்கி காற்றினால் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் அல்லது கடலில் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கியிருந்தால் அவர்கள் பற்றிய எந்தவித தகவல்களும் கிடைத்திருக்காது.

காணாமல் போன படகுகளை தேடுகிறோம் என்று பெருமெடுப்பில் விளம்பரம் செய்து அரசியல்வாதிகள் வழமைபோன்று தங்களது அரசியலுக்கான விளம்பரங்களை தேடிக்கொள்வார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.

கடந்த காலங்களில் மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர்களின் பட்டியல் நீளமானது. அத்துடன் மாலைதீவு, மலேசியா, இந்தோனேசியா மற்றும் நிகோபார் தீவுப் பகுதிகளில் படகுகள் திசைமாறி சென்று பல வாரங்களுக்கு பின்பு காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

தகவல் தொழில்நுற்ப சாதனங்கள் அதிஉச்ச வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலத்தில், எமது மீனவர்கள் மட்டும் தொழில்நுற்ப முன்னேற்றங்களின்றி பண்டைய காலத்து முறையிலேயே இன்னும் உள்ளனர்.

சில மீனவர்கள் சட்டலைட் தொலைபேசியை படன்படுத்தி தரையில் உள்ளவர்களுடன் உரையாடுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. ஆபத்து வருகின்றபோது கரையிலிருந்து உதவிக்காக செல்ல முடியாது.

ஆழ்கடலுக்குள் இருக்கும்போது மீனவர்களுக்கிடையில் இலகுவாக தொடர்புகொள்ளும் வகையில் ஒவ்வொரு படகுகளிலும் தொலைத்தொடர்பு வோக்கி டோக்கி செயல்படுத்தல்படல் வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு எமது அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் தனித்தனியாக இயங்குகின்ற “மீனவர் சங்கங்கள்” அனைத்தும் ஒன்றிணைந்து “மீனவர் சம்மேளனம்” உருவாக்கப்பட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்களின் பாதுகாப்புக்கு பொருத்தமான நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம் மட்டுமே எதிர்காலங்களில் இவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படுகின்றபோது உதவிக்காக அருகில் உள்ள படகுகளை அவசரமாக அழைத்து உதவிகளை பெறமுடியும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :