வடசென்னை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு விழாசென்னை : தமிழகத்தில் தற்பொழுது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாநில அளவில் கொரோனா பேரிடர் மீட்பு குழு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் சேவை பணிகள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா பேரிடர் மீட்பு பணிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவபொருட்கள், மருத்துவ படுக்கை பற்றாக்குறை உணவுப் பொருள்கள் வழங்குதல் , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தல் போன்ற பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் வடசென்னை மாவட்டம் சார்பாக பழைய வண்ணாரப்பேட்டையில் கொரோனா பேரிடர் உதவி மையம் மே 23 ஞாயிற்றுகிழமை திறந்து வைக்கபட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்ட தலைவர் ஃபக்கீர் முஹம்மது தலைமை தாங்கினார். கொரோனா பேரிடர் மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபிக் ராஜா திறந்து வைத்தார். வடசென்னை மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சம்சுத்தீன், நௌஷாத் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :