அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தேசியரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள்



ஏறாவூர் நிருபர் -நாஸர்-
மைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தேசியரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்களை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு கரடியனாறு கொவிட் வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஐம்பது கட்டில்கள் 24.05.2021 அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தயாரிக்கப்பட்ட பத்து கட்டில்களை பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் கையளித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச உத்தியோகத்தர் ஏ. டபிளியு இர்ஷாத் அலி உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.
களுவாஞ்சிக்குடி,காத்தான்குடி, ஏறாவூர் நகர் , ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் ஆகிய பிரதேச இளைஞர் சேவைகள் மன்றம் இக்கட்டில்களை தயாரித்து வழங்கியுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரம், பொலிஸார் முப்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதனால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. அந்தவகையில் அனைவருக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம் என்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :