பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் பலத்த கண்டனம்



ரசாங்கத்தின் கவனத்திற்கு ஒரு முக்கியமான விடயத்தைக் கொண்டுவர வேண்டியிருக்கின்றது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பயங்கரமான தாக்குதல்கள் கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு சபை தாமதித்து கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுகிழமை கூறியபோதிலும், இஸ்ரேலை வற்புறுத்தி பின்வாங்கச் செய்வதற்கு பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் ஒரு கூட்டறிக்கையைக் கூட வெளியிட முடியாது போயுள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை 220ஐயும் தாண்டிவிட்டது. அதில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிறு பிள்ளைகளும், பெண்களும், வயோதிபர்களும் ஆவர்.
இஸ்ரேலின் இராணுவ பலத்துடன் ஒப்பிடும்போது ஹமாஸின் பலம் எம்மாத்திரம்? ஒப்பீட்டளவில் பார்த்தால் பலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளும், சேதங்களும் மிகவுமே பாரதூரமானவையாகும். பலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்ய நீீண்ட காலம் செல்லும்.

இஸ்ரேல், சட்டபூர்வமான தற் பாதுகாப்புக்காக என்ற போர்வையில் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது; வியென்னா சாசனத்தையும் மீறி மனித உரிமை, மனிதாபிமான நெறிமுறைகளை அறவே பொருட்படுத்தாமல் மிலேச்சத்தனமாக நடந்து கொள்கின்றது.
இஸ்ரேலுக்குச் சார்பான அதன் மேற்கத்தேய நேச நாடுகள் இவ்வாறான ஈவிரக்கமற்றத் தாக்குதல்களுக்கு தூண்டுதலும், உற்சாகமும் ஊட்டிவருகின்றன.

இலங்கையை பொறுத்தவரை இவ்வாறான இழிசெயலை அமைதியாக வெறுமனே ஒரு பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் முடிந்தவரை நமது நாடு பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய சர்வதேச மட்டத்திலான உயர் சபைகளில் இந்த விவகாரம் தொடர்பில் வன்மையாகக் கருத்துரைக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :