நீதி அமைச்சர் அலி சப்ரியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தி.



சில்மியா யூசுப்-
லகெங்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கான புனித ரமலான் மாதத்தினை ஈத்-உல்-ஃபித்ர் நோன்பு பெருநாள் சுட்டிக்காட்டுகின்றது. ரமலான் மாதம் எத்தகயது என்றால் நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கும் ஒரு புனிதமான மாதமாக காணப்படுகிறது.
ரமழான் மாதமானது பிரார்த்தனை செய்தல் பாவமன்னிப்பு கோரல், பிரதிபலிப்பு செய்தல் , தர்மம் செய்தல், பணிவாய் நடந்து கொள்ளல், மற்றும் ஏழைகளின் கஷ்டங்களை புரிந்துக் கொள்ளும் மாதமாக காணப்படுகின்றது.

ஈத்-உல்-ஃபித்ர் நோன்பு பெருநாளானது குடும்பத்தினரோடும் உற்றார் உறவினர்களோடும் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான திரு நாளாகும், இம்மகிழ்ச்சிகரமான ஒன்றுகூடல் ஒரு சமூக பகிர்வுகளில் ஒன்றாக கொள்ளப்படுகின்றது.
இருப்பினும், இந்த ஆண்டு நாங்கள் மிகவும் வித்தியாசமான ஈதுல் பித்ர் நோன்புப் பெருளானினை எதிர்கொள்கிறோம். நம் நாடு பல சவால்களுக்கும் மற்றும் கஷ்டங்களுக்கும் மத்தியில் எதிர்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இக்காலமானது நமது நாடு மற்றும் அதன் நாட்டு மக்களின் வலிமை மற்றும் உறுதிக்கான ஒரு சோதனை காலமாகும்.
குறிப்பாக பண்டிகையானது பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஒரு மகிழ்ச்சிகரமான ஒன்றுக்கூடல் ஆகும். ஆனால் நாம் இவ்வாண்டில் வித்தியாசமான ஒரு முறையில் இதனை கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடுகையில் , அது நம்முடைய அன்புக்குரியவர்களின் சிறந்த நன்மைக்காகவும், நமது தேசத்துக்கான ஒரு கடமையாகவும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “ஒருவரின் நாட்டை நேசிப்பது விசுவாசத்தின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்”. என கூறி உள்ளார்கள்.

இந்த ஈத் திரு நாளில் , நமது தேசத்திற்காகவும் மேலும் இச் சோதனை காலத்திலும் எம்மை பாதுகாப்பாக வைத்திருக்க அயராது உழைக்கும் நமது சுகாதார ஊழியர்கள் மற்றும் நமது படைகளுக்காகவும், மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
எனவே அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ஈத் திருநாளில் எனது நல் வாழ்த்துக்களை அனைத்து மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.

M.U.M. Ali Sabry, P.C
Minister of Justice


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :