கூட்டுப் பொறுப்பை மீறியது யார்?? நோன்பு காலத்தில் ஏன் பொய் சொல்கிறீர்கள்???-றனூஸ் முகம்மத் இஸ்மாயில் கேள்வில்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்புச் சொல்வீர்களா???
இறுதியாக இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் உட்பட அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிறைய முஸ்லிம் தலைவர்களுக்காகவும் மற்றும் அப்பாவிகளுக்காகவும் ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன பேரணிகளை கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரப் அவர்களது தலைமையில் நடத்துவது எனவும்
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் எங்கு நடத்தப்பட்டாலும் அங்கு மாவட்டத்திலுள்ள இங்கே குழுமியிருக்கும் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்வது எனவும்....
தனித்தனியாக ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதில்லை எனவும்
தலைவருடைய விடுதலையை சாத்தியமாகக்கூடிய ஏனய உயர்மட்ட விடயங்களைச் செய்வதற்கு கட்சியின் அரசியல் அதி உயர் பீடத்தில் கதைத்து அவ்வாறான வேலைகளைச் செய்வதற்கு அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்றும்...
மேற்படி அநியாயமான தலைவருடைய கைது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தலைவருடைய புகைப்படத்தை கொண்ட சுவரொட்டிகளை மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட சுலோகங்களோடு அச்சிட்டு அவைகளை ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசங்களிலும் ஒட்டுவது என்றும்
தலைவருடைய அநியாயமாக கைது குறித்த ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிடுவது என்றும்...
குறித்து அம்பாறை மாவட்ட செயற்குழு கூடிய தினத்திற்கு அடுத்த இரண்டு தினங்களில் அரசியல் அதியுயர் பீட கூட்டம் கொழும்பில் இருப்பதால் அந்தக் கூட்டத்தை முடித்து விட்டு ஆர்ப்பாட்டப் பேரணிகளை தொடர்ச்சியாக எல்லா ஊர்களிலும் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறு அம்பாரை மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதன்படி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்எம்எஸ் முஷாரப் அவர்களுடைய தலைமையில் கல்முனையில் முதலாவது கண்டன பேரணியை நடத்துவதற்கு எத்தனித்த போதும் நீதிமன்றத்தில் இருந்து அந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு வந்ததனால் உடனடியாக அதனை மாவடிப்பள்ளியில் நடத்துவது என தீர்மானித்து பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களுடைய தலைமையில் அந்த ஆர்ப்பாட்ட பேரணி அவராலே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதற்குப் பிறகு அம்பாரை மாவட்ட செயற்குழு கூடவும் இல்லை அல்லது ஏலவே கூடி எடுக்கப்பட்ட எந்த தீர்மானத்தையும் இதுவரை நடத்தவும் இல்லை.
இதற்கு முதல் முறை தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்ட பொழுதும் அம்பாறை மாவட்ட செயற்குழு ஒருநாளும் கூடியதும் இல்லை அது குறித்து பேசியதும் இல்லை.
இவ்வாறு இருக்கும் பொழுது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் மாவட்டத்தின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்னும் வகையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி சில விடயங்கள் குறித்து தெளிவுகளை வழங்கியிருந்தார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவது என்பது மிகச் சாதாரணமானது என்பதுடன் அதை மிக சுயாதீனமாக அவரே தீர்மானித்தல் என்பதும் சர்வ சாதாரணமானது.
இந்நிலையில் நேற்று அம்பாறை மாவட்ட செயற்குழுவின் தலைவர் சட்டத்தரணி அலி அவர்களும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் சகோதரர் தாகிர் அவர்களும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சகோதரர் ஜவாத் அவர்கள் நேற்று ஒரு ஊடக சந்திப்பை நடத்தி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் கூட்டுப் பொறுப்பை மீறியதாக ஒரு குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் மீது முன் வைத்திருந்தார்கள்.
உண்மையில் இந்தக் கூட்டுப் பொறுப்பை மீறியது சகோதரர் ஜவாத் அவர்களளும் சகோதரர் அன்ஷில் அவர்களுமே ஆகும்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையிலேயே அனைத்து ஆர்ப்பாட்ட பேரணிகளும் நடத்தப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்தவர் சகோதரர் ஜவாத் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கல்முனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கண்டனப் பேரணி ஜவ்வாத் அவர்களுடைய தலைமையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் பொய் சொல்கிறார்.
ஜவாத் அவர்களுடைய கருத்தை அன்ஷில் அவர்களும் ஏற்றுக் கொள்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும்.
அம்பாறை மாவட்ட செயற்குழுவில் தீர்மானத்துக்கு எதிராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களை குற்றவாளியாக்கும் எண்ணத்தில் பொய்யான தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்துவதற்கு முன்பே முகநூலில் தெரிவித்திருந்தார்.


அதுமட்டுமல்லாமல் சகோதரர்கள் அவர்களுடைய தலைமையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அன்ஷில் அவர்களும் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் தலைவராக அவர் இருந்தும் அம்பாறை மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையிலேயே அனைத்து கண்டன ஆர்ப்பாட்ட பேரணிகளும் நடத்தப்பட வேண்டும் எனும் தீர்மானத்தை மறுத்துப் பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் அவர்கள் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் முஷாரகா கூட்டுப் பொறுப்பை மீறினார் என்னும் அவர்களுடைய குற்றச்சாட்டு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லை.
குறித்த கூட்டுப் பொறுப்பை மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியவர்களை கூறிவிட்டு அதை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஏன் போடுகிறார்கள் என்பது இங்கு சிந்திக்கத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வும் இன்னும் சில நாட்களில் மக்களுக்கு மிகவும் துலாம்பரமாக தெரியக்கூடிய உட்கட்சி அரசியல் சதி ஒன்றின் பின்புலத்திலேயும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை மக்களிடத்தில் இருந்தும் கட்சியில் இருந்தும் தூரமாக்கும் ஒரு சதி நோக்கத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது.
மேலே சொல்லியுள்ள கருத்துக்கள் பொய்யானது என்பதை சகோதரர் ஜவாத் அவர்களும் சகோதரர் அனில் அவர்களும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பார்களா??
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :