அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன?



04.05.2021 ம் திகதி மாலை 7.00 மணிக்கு கட்சிக் காரியாலயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான MSS அமீர் அலி தலைமையில் கட்சியின் அதி உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் அநியாயகக் கைது சம்மந்தமாக விரிவாக பேசப்பட்டது. பங்கேற்ற சகல உயர்பீட உறுப்பினர்களும் தலைவரின் ஜனநாயக விரோத கைதை கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஏகோபித்த கருத்துடன் பல்வேறு ஆலோசனைகளையும் தலைவரின் விடுதலையை துரிதப்படுத்த பல கருத்துகளையும் முன்வைத்தனர்.

தலைவரின் ஜனநாயக விரோத கைதுக்கு எதிராக முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் ,ஆதரவாளர்கள், போராளிகளுக்கு தவிசாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் நிர்வாக செயற்பாடுகளுக்கும் ஆவணங்களில் உத்தியோகபூர்வ ஒப்பமிடுவதற்கும் கட்சியை வழிநடத்துவதற்கும் தற்காலிகமாக (தலைவர் விடுதலையாகும் வரைக்கும்) கட்சியின் தற்காலிக தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணியும் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான கெளரவ சஹீட் அவர்களை நியமிப்பதாக உயர்பீட அதிகார சபை ஏகமனதாகத் தீர்மானித்து.

இது தொடர்பாக சட்டபூர்வ ஒரு நியமனத்தையே அரசியல் உயர்பீடம் மேற்கொண்டுள்ளது. எனவே பொறுமை காத்து கட்சியினால் தலைவரின் விடுதலைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்

M I முத்து முஹம்மட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :