‘சிறுபான்மை தலைவர்களை வேட்டையாடுகின்ற கலாசாரத்தை கைவிடுங்கள்’ – தவிசாளர் அமீர் அலி!



ஊடகப்பிரிவு-
சிறுபான்மை அரசியல் தலைவர்களை வேட்டையாடுகின்ற அரசியல் கலாச்சாரத்தை அரசாங்கம் கைவிட்டு, கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கட்சியின் தவிசாளர் அமீர் அலி கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி, கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஒரு கட்சியின் தலைவர். சிறுபான்மை மக்களின் தலைவர். ஜனநாயக முறைப்படி பாராளுமன்றம் தெரிவானவர். அவ்வாறான ஒருவரை, ஜனநாயகத்தை மதிக்காத முறையில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்திருப்பது, ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்துக்கும் கவலை தருகின்றது.
எமது கட்சியும் இவரின் கைதினால் துவண்டுபோயுள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். இன்றேல் அவர் ஏதாவது குற்றங்கள் செய்தார் என கருதினால் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, அதற்குரிய வழிமுறைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிறுபான்மை அரசியல் தலைவர்கள் வேட்டையாடப்படுகின்ற இந்த அரசியல் கலாச்சாரத்தை தயவு செய்து கைவிட்டு, நீதியான முறையில் நடந்துகொள்ளுங்கள். ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த வேண்டுகோளை நாம், விடுப்பதோடு, அரசியலை மையப்படுத்தி இனிமேலும் செயற்படுவதை நிறுத்துமாறு வேண்டுகின்றோம். சிறுபான்மை தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு கைது செய்வது, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் இரண்டுபட்ட கருத்தில்லை” என்றார்.

நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் தாஹிர் கூறியதாவது,


“கட்சியின் தலைவர் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிரபராதி என்று எல்லோருக்கும் தெரியும். அவர் மீது குற்றமிருந்தால் நீதிமன்றம் கொண்டு வந்து விசாரணை செய்யுங்கள். அதை விடுத்து, தொடர்ந்தும் தடுத்து வைத்து அநியாயம் இழைக்க வேண்டாம். கட்சியின் வளர்ச்சியை தாங்க முடியாத சக்திகளே இந்த அநீதியை மேற்கொண்டுள்ளனர். என்றார்.

மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவர் அன்சில் கருத்து தெரிவிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை வேண்டி நாடு பூராகவும் அமைதிப் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த ரமழான் மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் பலவீனத்தை மறைக்கவே இவர் காவுகொள்ளப்பட்டுள்ளார் என்பதுவும் அனைத்தின மக்களுக்கும் தெரியும். உண்மையான குற்றவாளிகளை மறைக்க அல்லது அவர்களை காப்பாற்றவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் இப்போது பந்தாடப்படுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை காரணம் காட்டி அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களும் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :