திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரலவிற்கு கோவிட் தொற்று உறுதி



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரலவிற்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிலுளள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை அவருடைய பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்தோடு தன்னோடு தொடர்புகளை பேணியோரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.

புத்தாண்டு கொவிட் அலை ஆரம்பமான பின்னர் கோவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள 5வது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :