நாட்டுக்கு வரும் விமானங்களில் ஒரு தடவையில் 75 பயணிகளுக்கு மாத்திரமே பயணிக்க முடியுமென அறிவிக்க்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 4 மணி முதல் அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாஸ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் தொற்றுப்பரவலின் நிலைமையினை ஆராய்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக விமானங்களில் 75 இலங்கையர்களும், அதற்கு மேலதிகமாக வெளிநாட்டவர்களும் அழைத்து வரப்படுவதற்கு அனுமதி அளிக்கபட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு நாட்டுக்கு வரும் விமானங்களில் ஒரு தடவையில் 75 பயணிகளுக்கு மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




0 comments :
Post a Comment