உடல்கள் நல்லடக்கம் 200 ஐ தாண்டியது; நான்கு நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த இடத்தில் இன்று (20) வியாழக்கிழமை மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

அந்தவகையில்,கடந்த திங்கள் முதல் இன்று வியாழன் வரையான நான்கு நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில், முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள.

இன்று (20) ஆம் திகதி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட 8 உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :