கொவிட்ட தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொண்டவர்கள் உட்பட இலங்கைக்கு வருபவர்கள் அனைவருக்கும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையர்கள், இரட்டை பிரஜா உரிமையுள்ளவர்கள், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் இராஜதந்திரிகள் அனைவரும் இதற்கு உட்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்களில், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நாட்டிற்கு வந்த முதல் நாளிலேயே கட்டாயமாக பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பின்னர் அவர்கள் வருகை தந்த 11 - 14 ஆவது நாட்களுக்கிடையில் இரண்டாவது பி சி ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இங்கு பி.சி.ஆர் பரிசோதனை முடிவு எதிர்மறையானதாக கிடைத்தால் பாத்திரமே அவர்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கொவிட் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் தனிமைப்படுத்தப்படும் காலம் நீட்டிக்கப்படலாம்.
அத்துடன், இந்த விதிமுறைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment