கொரோனா முதலாம் அலை 13 பேர் மட்டுமே மூன்றாம் அலையில்- 606 பேர் உயிரிழப்பு



J.f.காமிலா பேகம்-
லங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் சிக்கி இதுவரை 606 பேர் உயிரிழந்திருக்கிற்னர்.

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட 32 பேரின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து இந்தப் புதிய எண்ணிக்கை வெளியாகியிருக்கின்றது.

கொரோனா முதலாவது அலையில் 13 பேர் வரை உயிரிழந்தனர். இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையில் இதுவரை 1210 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 567 பேர் 70 வயதைக் கடந்தவர்கள். 61 தொடக்கம் 70 வயதினிடையே 321 பேரும், 51 தொடக்கம் 60 வயதிடையே 171 பேரும் உள்ளனர்.

அத்துடன் 41 முதல் 50 வயதிடையே 87 பேரும், 31 முதல் 40 வயதிடையே 34 பேரும் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். ‍

இதேவேளை, 10 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 15 பேரும், 9 வயதுக்கு குறைவான இருவரும் கொரோனா தொற்றில் இதுவரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :