றிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் அமைதிப்போராட்டம்ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி அமைதியான எதிர்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நண்பகல் 12 மணியில் இருந்து 1 மணிவரை கொழும்பு-07. தெவட்டஹக பள்ளிவாசலிற்கு எதிர்புறமாக இடம் பெற்றது.

மேற்படி போராட்டமானது;அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில் இடம் பெற்றது. கொரோனா நோயைக் கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சமுக இடைவெளியை பின்பற்றி இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்தன, முஜிபுர் ரஹ்மான், அமீர் அலி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட தொகையினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது றிஷாட்டை விடுதலை செய், ஏன் கைது செய்தாய் காரணத்தை வெளிப்படுத்து, றிஷாதுக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்திய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி கோசங்களை எழுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :