ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் ஊடக வெளியீடு



மே தின கொண்டாட்டங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டம் இந்த முறை மே தின கொண்டாட்டங்களை இடை நிறுத்தலாமா என்பதை தீர்மானிக்க கூட்டப்பட்ட கூட்டமாக முடிவடைந்தமை சிக்கலானது.
கூட்டத்தின் முக்கிய நோக்கம் இதுதான் என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. மே தின கொண்டாட்டங்களின் போது அரசாங்கத்தின் உள் அதிர்வுகள் தெளிவாக சமூகமயமாக்கப்படும் என்பதைத் தடுப்பதற்கான சிறந்த வழி கோவிட்டின் மூன்றாவது அலைகளைக் காண்பித்து மே தின கொண்டாட்டங்களைத் தடுப்பதே.
மே தின கொண்டாட்டங்களின் போது முதன் முறையாக கொண்டாடும் ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு இதைக் கொண்டாடும் என்பது குறித்து அரசாங்கத்திற்கும் அரசாங்கத்துடன் ஒப்பந்த அரசியலில் ஈடுபட்டவர்களுக்கும் இது குறித்து கடுமையான அச்சங்கள் இருந்தன. அத்தகைய மே தின கொண்டாட்டத்தை கூட ஏற்பாடு செய்ய முடியாத அரசியல்வாதிகள்,அரசாங்கத்தின் இந்த முடிவின் பின்னணியில் உள்ளனர் என்பது இரகசியமல்ல.
கடந்த பண்டிகைக் காலங்களில் மக்களை ஒன்று சேற இடமளித்து,மக்களை சேர்த்து ஜனாதிபதியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தடையின்றி ஒன்று கூட அனுமதித்த அரசாங்கம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதைத் தடுப்பதன் மூலம் அதன் வீழ்ச்சியடைந்த மக்கள் சக்தியின் வெளிப்பாட்டை மூடிமறைக்க எடுக்கும் வெட்கமில்லாத முயற்சி. இந்த முடிவை கோவிட் தொற்றுநோயைப் பயன்படுத்தி தொழிலாளர் வர்க்கத்தை அவமதிப்பதாக நாங்கள் கண்டிக்கிறோம்.

மே தின கொண்டாட்டங்களுக்கு தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கும் செயற்பாட்டையே அரசாங்கம் செய்திருக்க வேண்டும். இதைச் செய்வதை விட்டுவிட்டு மே தின கொண்டாட்டங்களை நிறுத்தியதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கமாகவே மேலும் அடையாளப்படுத்தப்படும் என்பதையும், அரசாங்கம் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.


ரஞ்சித் மத்தும பண்டார.
பொதுச் செயலாளர்,
ஐக்கிய மக்கள் சக்தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :