ஆனாலும் காத்தான்குடி தொழுகையாளிகள் மீது நடந்த கொலைகளுக்காக முஸ்லிம் சமூகம் தமிழ் கிராமங்களை தாக்கி கொள்ளை, கொலைகளில் ஈடுபடாமல் பொறுமை காத்தது.
ஈஸ்டர் தாக்குதலை சேர்ந்தோர் முஸ்லிம் சமூகத்தை சேந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் சமூகம் இன்று வரை பாரிய விலைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆனாலும் இந்த இடத்தில் மல்கம் கார்தினலை பாராட்ட வேண்டும். அவர் இன்று வரை இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளோரை கண்டறியும்படி அரசை வலியுறுத்திக்கொண்டிருக்கிறார். அத்துடன் அந்த சோக நிகழ்வை தேசிய நிகழ்வு நினைவாக காட்டுவதில் முனைப்பாக உள்ளார். இது சமய, சமூக தலைவர்களின் பணியாகும்.
ஆனால் முஸ்லிம்களின் சமய தலைமையான ஜம்மிய்யத்துல் உலமா 90ல் காத்தான்குடி பள்ளி தாக்குதலை தேசிய துக்க நினைவாக முன்னெடுத்துச்செல்லவில்லை என்பது வரலாற்று தவறாகும். அது பற்றிய நிகழ்வு காத்தான்குடிக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு விட்டது கவலைக்குரியதாகும்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை கடந்த நல்லாட்சி அரசு கண்டு பிடிக்க முடியாமல் வெறுமனே சமயத்தின் மீதும், தவ்ஹீதின் மீதும் சாட்டி தப்பிக்கொண்டது. இன்னமும் அதே நிலையிலேயே உள்ளது.
ஆகவே இந்த தாக்குதலை இயக்கியோர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சமய பற்றுள்ளவர்களோ அல்லது தவ்ஹீத் பிரச்சாரம் செய்பவர்களாகவோ நாட்டில் அறியப்பட்டிருக்கவில்லை. ஸஹ்ரான் ஒரு ஊர்ச்சண்டியனாக குழப்பக்காரனாகவே அறியப்பட்டிருந்தான்.
எனவே இத்தகையவர்களை மதம் சம்பந்தப்படாத உலக அரசியலே இயக்கியிருக்கும் என்றே தெரிகிறது. அதனை இலங்கையர் அனைவரும் ஒன்றித்து கண்டு பிடிப்பதே இன்றைய பணியாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்,
உலமா கட்சி. (UC)

0 comments :
Post a Comment