மதவாக்குளம் பாடசாலையிலிருந்து 60 வருட பூர்த்தியோடு ஓய்வு பெறும் அதிபர் I.M பஷீர்.



சில்மியா யூசுப்-
புத்தளமாவட்டம் ஆணமடுவ தொகுதியில் ஒரு அழகான பிரதேசத்தில் அமைந்துள்ள மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் மிக நீண்டகாலமாக தன்னை அர்ப்பணித்து 37 வருடங்கள் சேவையாற்றிய அதிபர் 60 வருட பூர்த்தியோடு எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி ஓய்வு பெறுகின்றார்.

இதன் பிரியாவிடை நிகழ்வு ஏப்ரல் 08 வியாழக்கிழமை மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஐ.எம்.பஷீர், ஷரபிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் இம்ரான், உப அதிபர் முகமட் ஆசிரியர், எஸ்டா சங்கத்தின் உறுப்பினர்கள், புத்தளம் வலயக்கல்வி கல்வி பிரதி பணிப்பாளர் அலி ஜின்னா,வலயகல்வி பணிப்பாளர் அர்ஜூன , பள்ளி நிர்வாகிகள், பாடசாலை பலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இப் பிரியாவிடை நிகழ்வில் அதிபர் அவர்களுக்கு ஆசிரியர்களினால் நினைவுச்சின்னங்களும், ஒரு லட்சம் பெறுமதியான கிப்ட் வோச்சரும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அத்துடன் இதில் தரம் ஐந்து புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் உரையாட்டிய அதிபர், 2002 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை சாதாரண தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களை உயர்தர வகுப்பிற்கு 2005 ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது இதற்கு முன்னய காலப்பகுதியில் மாணவர்கள் வெளிப்பாடசாலைக்கு செல்வதே வழக்கமாக காணப்பட்டது என்றார்.
இருப்பினும் அவருடை சேவைக்காலத்தில் இவரின் திட்டத்தை சரியாக நிர்ணயித்து மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலத்தை பல சவால்களுக்கு மத்தியில் மாணவர்களை வழிநடத்தி சிறந்த பெறுபேற்றுக்களோடு முதல் முறையாக 2007ம் ஆண்டு உயர்தரத்தில் மாணவர்களை வெற்றிகரமான முறையில் சிறப்பான முறையில் சித்தியடைந்தனர் இது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றார். இதில் ஒருவர் சட்டக்கல்லூரிக்கும் மூவர் கல்வியற் கல்லூரிக்கும் தெரிவானார்கள் என்பது குறிப்பிடதக்க அம்சமாகும். அன்று முதல் இன்று வரை எமது முயற்சியால் மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கும் சென்று இன்று 60ற்கு மேற்பட்டவர்கள் பல பிரதேசங்களில் சேவையாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :