இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பினால் முன்னோடுக்கப்பட்டு வரும் முன்பள்ளி மாணவர்களின் கல்வியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் "சிறுவர்கள் நாளை தலைவர்கள்" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் 30 ஆண்டுகளாக இயங்கி வரும் அரபாத் மிலேனியம் முன்பள்ளி பாடசாலையின் 2021 ம் ஆண்டு புதிய மாணவர்களாக இணைந்து கொண்டவர்களை வரவேற்கும் (வித்தியாரம்ப) விழா நேற்று (10) புதன்கிழமை பாடசாலையின் அதிபர் ஆயிஷா நூறுத்தீன் தலைமையில் நடைபெற்ற போது முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பின் தலைவர் முஸ்தபா முபாறக், அமைப்பின் மகளிர் பிரிவு தலைவி பஸ்லூன் முபாறக், பிரதி செயலாளர் இஸ்பாக் நிஸாம் மற்றும் உயர்பீட உறுப்பினர் முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment