சம்மாந்துறையில் கொட்டும் மழையிலும் சுலோகங்களுடன் வீதிக்கு இறங்கிய சுகாதாரத்துறையினர் !



நூருல் ஹுதா உமர் , ஐ. எல்.எம். நாஸிம்-
க்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று சர்வதேச ரீதியாக உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day) அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையம் இணைத்து நடத்திய காச நோய் தொடர்பிலான விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றலுடன் சம்மாந்துறையில் நடைபெற்றது.

காசநோய் பற்றிய விழிப்புணர்வு பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், சுலோகங்களை ஏந்திக்கொண்டு சம்மாந்துறை வீதிகளில் இந்த விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வு நடைபவனியில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம். ஹனீபா, திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர். நியாஸ் அஹமட், மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திலீப் மபாஸ், பொதுசுகாதார பரிசோதகர்கள், வைத்தியத்துறை சார் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :