மழைக்குப்பின்னர் டெங்கு திவீரம்: காரைதீவில் புகைவிசிறல்.



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கில் சமகாலத்தில் மழை பொழிந்து வருவதனால் டெங்கின் தாக்கம் மீண்டும் திவீரமாகிவருகிறது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
டெங்குத்தாக்கத்தை கட்டுப்படுத்துமுகமாக சுகாதாரவைத்தியஅதிகாரிகள் புகைவிசிறும் செயற்பாடுகள் வீடுவீடாகச் சோதனையிடும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் ஏற்பாட்டில் டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ள 3இடங்களைச்சுற்றி புகைவிசிறும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார்.
பிரதம பொதுச்சகாதாரப்பரிசோதகர் சா.வேல்முருகு தலைமையில் நேற்று காரைதீவில் டெங்குத்தடுப்பிற்கான புகை விசிறும் நடவடிக்கை வெற்றிபரமாக முன்னெடுக்கப்பட்டது.

காரைதீவுப்பிரதேசத்தில் இம்மாதத்தில் மட்டும் 3டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டள்ளனரென்றும் இவ்வருடம் ஆறு நோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை தெரிவிக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :