க.பொ.த சாதாரண தர பரீட்சையில் குதிரையோடச் சென்ற 21 வயது இளைஞன் கைது..!

நுராதபுரம் பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட வேறு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கணித பரீட்சையில் உறவினர் ஒருவருக்காக முன்னின்றமை தொடர்பில் பரீட்சை கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹராம, வீரவல பகுதியை சேர்ந்த குறித்த நபர் பரீட்சை எழுதுவதற்காக அநுராதபுரத்திற்கு வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் வலஸ்முல்ல மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இது போன்று பரீட்சை எழுத முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :