நிந்தவூர் ரிதம் கலை மன்றத்தின் தலைவர் மற்றும் பொருளாளருக்கு கலைஞர் சுவதம் விருது-2020.



யாக்கூப் பஹாத்-
லாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அண்மையில் (19.03.2021) நிந்தவூரை மையமாகக் கொண்டு இயங்கும் ரிதம் கலை மன்றத்தின் தலைவரும் சிரேஷ்ட பாடகருமான ஏ.பீ.எம் ரியால் மற்றும் ரிதம் கலை மன்றத்தின் பொருளாளரும் சிரேஷ்ட பாடகருமான கே.எம். நஷார் ஆகியோருக்கு கலைஞர் சுவதம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலை, இலக்கியத்திற்கான விருதும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கலாசார திணைக்களப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கௌரவிப்பு வைபவம் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான் உட்பட நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது 15 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஜேசுதாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் பாடகர் ஏ.பீ.எம் ரியால் பாடசாலைக் காலங்களில் இருந்தே சங்கீதத்தை முறையாக கற்று பிராந்திய மற்றும் தேசிய ரீதியாக பல போட்டிகளிலும் வெற்றிகண்ட பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே பாடகர் கே.எம். நஷார் அவர்களும் கலைத்துறையில் பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் குறிப்பாக பாடுவதிலும் பல்வேறுபட்ட விருதுகளை வென்றவர் என்பதும் சிறப்புக்குறியது ஆகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :