கொரோனா வைரஸ் தண்ணீரில் பரவாது என்றால் தீவு தேடிப் போவது ஏன்? அதுவும் சகோதர தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் இரணைதீவுக்கு போவது ஏன்? வேண்டுமென்றே கொரோனாவை வைத்து இந்த இரு சமுகங்களையும் மோதவிடுவதற்காக மூட்டிவிடுகிறார்கள். இது மனிதாபிமானமேஅல்ல. இந்தஅனைத்து பழிபாவங்களையும் அரசுக்கு ஆதரவாக 20க்கு கைதூக்கியவர்கள் பொறுப்பேற்கவேண்டும்.
இவ்வாறு மூத்தஅரசியல்வாதியும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
ஜனாஸாக்களுடைய எரிப்பு நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியிருந்தது.முஸ்லிம்களை பழிவாங்கும்நோக்கில் வேண்டுமென்றே இதனை இழுத்தடித்தார்கள்.பலத்த முயற்சிகள் அளுத்தங்களின்பின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஜனாஸாக்களை இரணைமடுவில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்றன. அவை நியாயமானவை.
தமிழ்சகோதரர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமானது. அது அவர்களது உரிமை.பிழையல்ல. சிங்களபிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாமென்றால் தமிழ்மக்கள் ஏன் எதிர்க்கமுடியாது? என்று கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும்கூறுகையில்:
எமது ஜனாசாக்களை அடக்க நாம் ஏலவே இறக்காமம் சம்மாந்துறை ஓட்டமாவடி என்று பல இடங்களை அடையாளப்படுத்தியிருந்தோம். அதையெல்லாம் விட்டுவிட்டு எங்கோஉள்ள இரணைதீவுக்குகொண்டு செல்வதன் மர்மம் என்ன? நிபுணர்குழுவே தண்ணீரில் இவ்வைரஸ் பரவாது என்று கூறியிருக்கிறது. அப்படியென்றால் ஏனிந்த சுத்துமாத்து?
முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை முஸ்லிம் மக்கள் வாழுகின்ற அவர்களுடைய சொந்த ஊரிலேயே அடக்கம் செய்வதை முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள அடக்குவதற்கு பொருத்தமான இடங்களில் முஸ்லிம் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப் படுவதையே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றார்கள். இதனால் தொற்று நோய் பரவுவதாக இருந்தால் முதலில் இங்குள்ள மக்களையே அது பாதிக்கும். இதனை அம்மக்கள் பொறுப்பேற்பதற்கு தயாராக இருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் அனுமதி கிடைத்தால் முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
0 comments :
Post a Comment