இலங்கை பொலிஸூக்கு பல்வேறு பதவி நிலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன



பாறுக் ஷிஹான்-
லங்கை பொலிஸூக்கு பல்வேறு பதவி நிலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கடந்த 12.02.2021 ம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரச வேலைவாய்ப்பு அறிவித்தல்களில் இப்பதவிக்கான முக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதன் படி இலங்கைப் பொலிஸில் நிலவும் பொலிஸ் கான்ஸ்டபில் ,பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி, பதவிகளுக்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தேவையான அடிப்படைத் தகைமைகள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இப் பதவிகளுக்கு வயதெல்லையாக வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18-25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வித் தகைமைகளாக க.பொ.த. (சா. தர.) பரீட்சையில் ஊடக மொழியில் திறமைச் சித்தியுடன் விண்ணப்பதாரி ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியெய்தியிருப்பதுடன் 04 பாடங்களில் திறமைச் சித்தியெய்தியிருத்தல் வேண்டும். மேலும் கணித பாடத்தில் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும் எனவும் உடற் தகைமைகளாக உயரம் : 05 அடி 04 அங்குலம் (ஆகக் குறைந்தது)மார்பு : 30 அங்குலம் (ஆகக் குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்)சம்பள அளவுத்திட்டம் - 41,630 உள்ளிட்ட கொடுப்பனவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விண்ணப்ப முடிவு திகதியாக 31.03.2021 குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :