கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனினால் பொதுக்கிணறு மற்றும் பாதணிகள் கையளிப்பு


எம்.எஸ்.எம்.ஸாகிர்-

ல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு ஜும்ஆப்பள்ளிவாசல் மற்றும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஜும்ஆப்பள்ளிவாசல் என்பவற்றுக்கு மிகவும் தேவைப்பாடாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினை மற்றும் அங்கு தினமும் மத்ரஷாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நீர்ப்பற்றாக்குறை ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக பொதுக்கிணறுகளை உடனடியாகச் செய்து கொடுத்ததுடன் வசதி குறைந்த மாணவர்களுக்கு சப்பாத்து பாதணிகளையும் கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.

வை.டபிள்யூ.எம்.ஏ.அமைப்பினரின் பூரண அனுசரணையில் இம்மக்களுக்கான குடிநீர் பிரச்சினையை ரஹ்மத் மன்சூர் நிவர்த்தி செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் .

மேலும் இந்நிகழ்வில், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் அன்றாடாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவர் ரஹ்மத் மன்சூரிடம் முன்வைத்தனர்.

கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினர் கடந்த பல வருடங்களாக சமூக நேயப்பணிகளை மக்களுக்கு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :