மூத்த ஒலிபரப்பாளர் ரஷீத் எம் ஹபீழின் மறைவு கவலை தருகின்றது – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஊடகப்பிரிவு-


ப்தார் பிரார்த்தனை புகழ், ரஷீத் எம் ஹபீழ் இறையடி சேர்ந்த செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

அறிவிப்புத் துறையில் தனி ஆளுமைத் தடம் பதித்த மர்ஹும் ரஷீட் எம் ஹபீழ், வாஞ்ஞையுடன் பழகும் ஒரு மானிட நேயன்.

புனித நோன்பு காலங்களில் அவரது குரலால் கவரப்பட்ட பல முஸ்லிம்கள், அன்னாரது இழப்பால் கவலையடைகின்றனர். தன்னிடமிருந்த திறமைகளை பிறருக்கும் பயிற்றுவித்து, பழக்கி பல ஊடகவியலாளர்களை அவர் வளர்த்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் பணியாற்றிய காலத்தில், அவருக்கிருந்த இலட்சியங்கள் பலதையும் வெற்றிகண்டார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவுப் பொறுப்பாளராகப் பணியாற்றி அவர் செய்த சேவைகளுக்கு, முஸ்லிம் சமூகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.

இவ்வாறு பல சேவைகள், தொண்டுகள் செய்த அவர், ஒரு சமூக சேவையாளராகவும் திகழ்ந்தார். அன்னாரது சேவைகளை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்ள வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :