பட்டதாரி பயிலுனர்களுக்கான யோகா பயிற்சி விழிப்புணர்வு நிகழ்வு...

றாசிக் நபாயிஸ்-

திமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக
கல்முனை பிரதேச செயலகப் பிரிவில்
இணைத்துக் கொள்ளப்பட்ட 25
பட்டதாரி பயிலுனர்களுக்கான

யோகா பயிற்சி, கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான மூச்சுப் பயிற்சியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் இம்திஸா ஹஸனின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (19) இடம் பெற்றது.

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வுக்கு வளவாளராக திருகோணமலையைச் சேர்ந்த
சர்வதேச யோகா பயிற்றுவிப்பாளர் வி.விஜயானந்தி கலந்து கொண்டு

பயிற்சிகளை வழங்கினார்.

இதன் போது இதன் யோகாவின் நோக்கங்கள்,
மூச்சுப் பயிற்சி, உடல் பயிற்சி, ஆசன வகைகள், உணவுப் பழக்க வழக்கம்
மற்றும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான பயிற்சியுடன் கூடிய தகவல்களும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :