மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகத்தின் 10 வருட பூர்த்தியும், கிரிக்கெட் கொண்டாட்டமும்..!



அஹமட் சாஜித் -
மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகம் ஆரம்பித்து இவ்வருடத்தோடு 10 ஆண்டுகள் நிறைவுபெருகின்றது. அதனை சிறப்பிக்குமுகமாக கழகத்திலுள்ள அனைத்து வீரர்களையும் மூன்று அணியாகப் பிரித்து அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று நேற்று (26) மாவடிப்பள்ளி கமு/ அல் அஷ்ரப் மகாவித்தியால மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இத் தொடரில் மாவடி லெஜன்ட், மாவடி மாஸ்டர், மாவடி ஹில்ஸ் ஆகிய பெயர்களைக் கொண்ட 3 அணிகள் பங்கு பற்றி இறுதிப்போட்டிக்கு மாவடி மாஸ்டர் அணியும், மாவடி லெஜன்ட் அணியும் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டியில் மாவடி லெஜன்ட் அணியினர் வெற்றிவாகை சூடினர்.
இப் போட்டிக்கு பூரண அனுசரனை வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடிய மாவடி லெஜன்ட் அணியினருக்கு கிண்ணத்தினை வழங்கியதுடன், இரண்டாம் இடத்தினைப்பெற்ற மாவடி மாஸ்டர் அணியினருக்கு மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சிராஜ் ஆசிரியர் மற்றும் கழகத்தின் தவிசாளர் ரிஸ்பத் ஆகியோரினால் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :