இனவாதத்தை மறந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீல நுவான் அத்துகோரல தெரிவிப்பு.


எப்.முபாரக் -

னவாதத்தை மறந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீல நுவான் அத்துகோரல தெரிவித்தார்.

கந்தளாயில் இன்று(17) வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து. உரையாற்றுகையில்:

கந்தளாய் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இருக்கின்றனர்,கடந்த நல்லாட்சி அரசாங்கம் இவ்வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வில்லை.

கடந்த 30 வருட காலமாக இருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் நல்ல ஆட்சியில் பல பாரிய திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது .

அந்த திட்டங்களுக்கான பல வேலைகள் அவற்றில் வீதிகளுக்கு காபட் வீதி செயற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன .
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் பல அமைப்பு இந்த ஒதுக்கீட்டை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத போதிலும் தற்போதைய அரசாங்கத்தில் கஷ்டப்பட்டு வறிய சமுர்த்தி பயனாளிகளுக்கு அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற ஒரு வீட்டை இந்த அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அத்தோடு கப்பல்துறை பகுதியில் வீட்டுத்திட்டங்கள் என்ற போர்வையில் திட்டத்திற்கான அடிக்கற்களும் அத்திவாரமுமே காணப்படுகின்றன,அப்பிரதேசம் காடுகளாக மாறி காணப்படுகின்றன.

தற்போது இருக்கின்ற இந்த அரசாங்கத்தில் எந்த மோசடியும் இனவாதமும் இல்லை சென்ற அரசாங்கத்தில் யாழ்ப்பாணத்தில் என்ற குறிப்பு இயக்கப்பட்டது தற்போது அந்த குரூப் எல்லாம் இல்லாதொழித்து நாட்டில் சுபிட்சம் சௌபாக்கியம் திட்டத்தை ஜனாதிபதி முன் நடத்திச் செல்கின்றார் .
எனவே நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :