தோணா வெட்டுகையில் தலையீடு: தவிசாளர் விரைந்து சுமுகதீர்வு!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு தென்புலஎல்லையிலுள்ள தோணா வெட்டும்போது அங்கு வந்த  கும்பலொன்று வெட்டமுடியாமல் குறுக்கீடு செய்தது. தடங்கலை ஏற்படுத்தினர்.அதனையடுத்து அங்கு சர்ச்சை ஏற்பட்டது.

அண்மையில் பெய்தபெருமழையையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் காரைதீவின் ஒரு பகுதிமூழ்க ஆரம்பித்ததும் தவிசாளரின் உத்தரவின்பேரில் ஊழியர்கள் தோணா வெட்ட ஆரம்பித்தனர். அப்போது இப்பிரச்சினை ஏற்பட்டது.

சம்பவத்தை கேள்வியுற்ற காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உடனடியாக சக உறுப்பினர்களுடன் விரைந்ததும் குழப்பிய கும்பல் ஓடித்தப்பிவிட்டது.

இது தொடர்பாக பொலிசார் பிரதேசசெயலகம் கரையோரப்பாதுகாப்பு திணைக்களத்திடம் அறிவிக்கப்பட்டது.பின்பு சபை ஊழியர்கள் பொதுமக்கள் சேர்ந்து தோணாவை வெட்டினர். வெள்ளம் வடிந்தோடியது.

ஏலவே ஊர்ப்பக்கமாக உள்ள பழைய தோணாவை வெட்டிவிட்டகாரணத்தினால் அருகிலுள்ள ஒரேயொரு மயானம் சேதமாகிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :