கல்முனை மாநகர சபையின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வுஅஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபை ஊழியர்களின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (01) மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாநகர மேயரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதையடுத்து நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாநகர ஆணையாளரின் நெறிப்படுத்தலில் ஊழியர்கள் அனைவரும் சத்தியப்பிரமாண உறுதியுரையை மேற்கொண்டனர்.

அத்துடன் மாநகர மேயர் றகீப், சுபீட்சத்தை நோக்கிய ஆண்டு எனும் தொனிப்பொருளில் பிரகடன உரையையும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் கொவிட்-19 விழிப்புணர்வு தொடர்பான உரையையும் நிகழ்த்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :