கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை பாதுகாத்து வைக்கக் கூடிய குளிரூட்டியினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதன்கிழமை(27) கையளித்தது.
காத்தான்குடி வாழ் பொது மக்களின் நிதிப் பங்களிப்பை கொண்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இக் குளிரூட்டி கொள்வனவு செய்யப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
கொவிட் தொற்றினால் மரணிக்கும் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் ஜனாசாக்களை பாதுகாத்து வைப்பதற்காக இந்த குளிரூட்டி கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் குளிரூட்டியில் ஒரே நேரத்தில் 20 ஜனாசாக்களை வைக்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment