சீலை முகக்கவசம் நல்லதல்ல: சுயநலவாதியாயிருந்தால் கொரோனா நெருங்காது!பாடசாலை கூட்டத்தில் சிரேஸ்ட பொதுச்சுகாதாரபரிசோதகர் வேல்முருகு.
காரைதீவு நிருபர்-
ற்காலத்தில் முகக்கவசம் அணிவது மிகஅவசியமானதாகும். அதற்காக சீலையாலான முகக்கவசத்தைப் பயன்படுத்துவது நல்லதல்ல. அது கொரொனாவிடமிருந்து போதுமான பாதுகாப்பைத்தராது.

இவ்வாறு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் உரையாற்றிய சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சாமித்தம்பி வேல்முருகு தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று பாடசாலை அதிபர் பா.சந்திரேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பெற்றார் ஆசிரியர் பா.அ.சங்கபிரதிநிதிகள் கூட்டத்தில் சுகாதாரநடைமுறைகள் பற்றி பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் பா.அ.சங்க பிரதிநிதியும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கல்வியமைச்சின் கொரோனா தொடர்பான சுற்றுநிருபம் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார்.

அங்கு வேல்முருகு மேலும் பேசுகையில்:

பாடசாலைக்கு மாணவர் வருகையில் முகக்கவசம் கைகழுவுதல் சமுகஇடைவெளி என்ற 3 சுகாதார நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்றவேண்டும். இது ஆசிரியர் அதிபருக்கும் பொருந்தும்.

கன்ரீன் திறக்கப்படக்கூடாது. மாணவர் வீட்டிலிருந்து கொண்டுவரும் தின்பண்டங்களை ஏனையோருக்குப் பகிராமல் தானே உண்ணவேண்டும்.
மொத்தத்தில் பொதுநலவாதியாக இல்லாமல் சுயநலவாதியாக இருந்தால் கொரோனா எம்மை நெருங்காது. என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :