உடல்களை புதைப்பதா எரிப்பதா என்பது தேசிய பிரச்சினையல்ல -மகிந்த அணி..!

J.f.காமிலா பேகம்-

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்கிற விவகாரம் ஒரு தேசிய பிரச்சினையே கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.

கொழும்பில் திங்கட்கிழமை(4) நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு பேசிய அவ‘கோவிட் மரணங்களின் உடல்கள்குறித்து 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு மேலதிகமாக ஒரு குழுவினால் இறுதிப்பரிந்துரையை செய்ய முடியாது. வேறெந்த குழுக்களும் நியமிக்கப்படவும் இல்லை. 

ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட குழுவே இப்போதும் உள்ளது. எனவே அரசாங்கத்தை சங்கடநிலைக்கு தள்ளுகின்ற முயற்சியே பலராலும் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை அரசியல் பிரச்சினையாக மாற்ற முனைகின்றனர். 

கோவிட் உடல்களை புதைப்பதா எரிப்பதா என்பது தேசிய பிரச்சினையல்ல. பொருளாதார ரீதியில் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது, கோவிட் மீண்டும் பரவாமலிருக்க என்ன நடவடிக்கை எடுப்பது குறித்த விடயங்களே முக்கியமானதாகும். 

அந்தக் குழுவினருக்கு தொழிற்துறை அனுபவமுள்ளவர்களே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அரசியல் அழுத்தம் குறித்து அவர்கள் சொல்ல முடியாது. சுகாதாரத்துறையில் எடுக்கின்ற தீர்மானங்களை இடைமறிப்பதற்கு இந்த அரசாங்கத்தை மக்கள் நியமிக்கவில்லை. கோவிட் தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் ஒருசில தரப்பினர் கோவிட் மரணங்கள் பின்னால் சென்று அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்’ என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :