அல் நஜாவின் சமூக சேவகளை ஜம்மியத்துல் உலமா சபை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பாராட்டு

அட்டாளைச்சேனை பைஷல் இஸ்மாயில் -

ம்பாறை, அட்டாளைச்சேனை அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் சமூக சேவைகளில் மற்றுமோர் சேவையான ஜனாஸா குளிப்பாட்டும் தட்டு மற்றும் அதில் தொண்டர்களாக கடமையாற்றும் உறுப்பினர்களுக்கு மேலங்கி வழங்கி வைக்கும் அங்குரார்பன நிகழ்வு இன்று (17) கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் ஆரம்பித்த வைக்கப்பட்டது.

ஜனாஸா இடம்பெறுகின்ற வீடுகளுக்கு கதிரைகளையும், கூடாரங்களையும் வழங்கி வந்த எங்களுக்கு, ஜனாஸா குளிப்பாட்டும் தட்டு இல்லாத குறை மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. அந்தக் குறைபாடும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனாஸா வீடுகளுக்கு தேவைப்படும் முழுமையான உபகரணங்களை எங்களால் வழங்கி வைக்க முடியும் என்று கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஜனாஸா வீடுகளுக்கு கதிரைகளையும், கூடாரங்களையும் (ஹட்) முற்று முழுதாக இலவசமாக வழங்கி வந்தோம். அத்தடன் அதற்கான வாகன சேவை, ஆளணி போன்ற சேவைகளை கழகத்தின் உறுப்பினர்களே முன்னின்று எவ்வித எதிர்பார்ப்புகளுமின்ற செய்து வருகின்றனர். எங்களின் இச்சேவைகளை அட்டாளைச்சேனை உலமா சபை மட்டுமல்ல ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பாட்டி வருகின்றன.

ஜனாஸா இடம்பெறுகின்ற வீடுகளுக்கு முற்றிலும் இலவசமாக இந்த சேவையை வழங்கி வருகின்ற எங்களிடம் ஜனாஸாவுக்கான கபன் சீலையும் இலவசமாக வழங்கி வைக்க சிலர் முன்வந்துள்ளதையும், ஜனாஸா குளிப்பாட்டும் தட்டை கொள்வனவு செய்வதற்காக கழகத்தின் சிரேஷ்ட வீரர்களதும், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தொழில் புரியும் தனவந்தர்களின் நிதியுதவி கிடைக்கப்பெற்று கொள்வனவு செய்யப்பட்டது என்பதையும் நான் இச் சந்தர்ப்பத்தில் மகிழ்வோடு தெரிவிக்கின்றேன் என்றார்.

கழகத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பன நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், சாட் நிருவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய ஏ.கே.அமீர், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஜூனைதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளருமாகிய எஸ்.எல்.முனாஸ், கோணாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவரும், ஓய்வுபெற்ற சமூக சேவை உத்தியோகத்தருமான எஸ்.எம்.அமீன், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத், அட்டாளைச்சேனை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி யூ.கே.முபீஸ் (ஸஹ்வி), தர்பியத்தில் இஸ்லாமியா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் மௌலவி ஈ.முபீன் (ஷஹ்வி), கழகத்தின் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்ஸான், பொருளாளர் ஏ.எல்.றிம்ஸான், அட்டாளைச்சேனை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட கழக வீரர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :