பைடன் பதவியேற்பை தடுக்க அமெரிக்கா முழுதும் கலவரம் வெடிக்கலாம். எச்சரிக்கை?



J.f.காமிலா பேகம்-
மெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், கலவரங்கள் நாடெங்கிலும் வெடிக்கலாம் என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்த சந்தர்ப்பமானாலும் தாம் எதிர்கொள்ள தயாராகிவிட்டதாக ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 20 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இதற்கான அரசமுறை நிகழ்வானது அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டின் உளவுத்துறையான எவ்.பி.ஐ, ஜோ பைடனின் பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு ட்ரப்பின் ஆதரவாளர்கள் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களையும் சில வேளைகளில் கலவரங்களையும் நடத்தக்கூடும் என்கிற எச்சரிக்கையை அரசிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :