இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம்.மின்; பிரதிப் பணிப்பாளராக பஷீர் அப்துல் கையூம் நியமனம்.



பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம்.வானொலின் கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றி வந்த மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை.எப்.எம்.மின் பிரதிப் பணிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்..கடந்த 15 வருடங்களாக பிறை எப்.எம்.வானொலியின் கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய நிலையிலேயே 2020-12-16ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1968-02-05ஆம் திகதி மருதமுனையில் பிறந்த இவர் மருதமுனையைச் முகம்மது பஷீர் உம்மு சல்மா தம்பதியின் மூன்றாவது புதல்வராவார்.மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி பேராதனை பல்கலைக் கழகத்தில் கற்று கலைப் பட்டதாரியாக வெளியேறினார்.1987ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்று அப்போதய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜவர்த்தன விடமிருந்து ஜனாதிபதி விருதைப் பெற்றார்.

1990ஆம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட அறிவிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்று அப்போதய ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவிடமிருந்து ஜனாதிபதி விருதைப்பெற்றார்.1992ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்தார்.1994ஆம் ஆண்டு வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார்.1996ஆம் ஆண்டு நிரந்தர நியமனம் பெற்று வர்த்தக சேவையின் தயாரிப்பாளரானார்.2004ஆம் ஆண்டு அமைப்பாளராகவும்,2009ஆம் ஆண்டு சிரேஷ்ட அமைப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

2005ஆம் இலங்கை ரூபவாஹினியில்; செய்தி வாசிப்பாளராவும் தெரிவு செய்யப்பட்டார்;. அக்கரைப் பற்றில் 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிறை எப்.எம்.வானொலியின் பதில் கட்டுப்பாட்டாளராக நியமனம் பெற்று 2013ஆம் ஆண்டு கட்டுப்பாட்டாளராக நிரந்த நியமனம் பெற்றார்.கடந்த 15 வருடங்களாக கடமையாற்றி வந்த நிலையிலேயே பிறை எப்.எம்.மின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :