அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் , ஆளுநர் மற்றும் முக்கியஸ்தர்களின் வாய்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதா? -இம்ரான் எம்.பி



சில்மியா யூசுப்.
ரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,ஆளுநர் மற்றும் முக்கியஸ்தர்களின் வாய்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று 10 கண்டி ஹரிஸ்பத்துவ தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களை தொடர்ந்தும் எரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில் அரச தரப்பில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இதுவரை இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயோ வெளியேயோ எவ்வித நடவடிக்கை எடுக்கவோ இது பற்றி பேசவோ இல்லை. இன்று சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதனை எதிர்த்து போராடி முகம் கொடுக்க முடியாதவர்களாக இவர்களின் வாய்க்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதா?
இவர்களுக்கு மேலதிகமாக இருபதாம் திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்து அரசுடன் இணைந்த உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் இருபதாம் திருத்தசட்ட வாக்களிப்பு முடிவடைந்தது தொடக்கம் இன்றுவரை பாராளுமன்றத்திலோ ஊடகங்களிலோ ஒரு முறையேனும் பேசாத பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

இவ்வாறு எமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அமைதியாக இருந்த பின் ஏதாவது சாதகமாக நடைபெறுவது போல் தோன்றினால் கரும்பு சாப்பிட மட்டும் வெளியே வரும் உறுப்பினர்களும் உள்ளனர்.

ஆகவே எதிர்காலத்தில் இந்த இனவாத அரசாங்கத்துக்கும் இந்த வியாபார அரசியல்வாதிகளுக்கும் சிறந்த பாடம் புகட்டி அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :