இந்தியாவில் 2 மகள்களை நரபலி கொடுத்த கொடூரம்!மகள்களை நரபலி கொடுத்து விட்டு மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த பேராசிய தம்பதியால் பெற்றோரால் ஆந்திராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி வசித்து வருகின்றனர். புருஷோத்தம் நாயுடு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரின் மனைவி பத்மஜா பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களின் மூத்த மகள் அலேக்யா ( வயது 27) எம்.பி.ஏ படித்துவிட்டு போபாலில் வேலை பார்த்து வந்துள்ளர். இரண்டாவது மகள் சாய் திவ்யா (22) ஏ. ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பெற்றோருடன் தங்கள் வீட்டில் மகள்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி புருசோத்தம் அவரின் மனைவி பத்மஜா ஆகியோர்வழிபட்டு வந்துள்ளனர். நேற்றிரவு வீட்டில் பூஜைகள் செய்த பெற்றோர் முதலில் சாய் திவ்யாவை நிர்வாணப்படுத்தி மொட்டையடித்தனர். பிறகு மூத்த மகள் அலெக்கியாவும் நிர்வாணப்படுத்தி மொட்டையடித்துள்ளனர். பிறகு, உடற்பயிற்சி செய்யும் சாதனமான டம்பிள்ஸ் மூலம் இவருவரையும் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்களின் உடல்களுக்கு பூஜைகள் செய்துள்ளனர். வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி கூறுகையில் புருஷேத்தம் நாயுடு வீட்டுக்கு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். அப்போது, வீட்டுக்குள் மகள்கள் இருவரும் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பெற்றோரிடத்தில் சம்பவம் குறித்து விசாரித்த போது, ஒரு இரவு பொறுத்திருங்கள் எங்கள் மகள்கள் உயிர்த்தெழுந்து வந்து விடுவார்கள் ' என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். மேலும், போலீஸாரையும் வீட்டுக்குள் விட மறுத்துள்ளனர். பின்னர், உள்ளே புகுந்த போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த துயர சம்பவம் குறித்து சித்தூர் டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி கூறுகையில், புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். தங்கள் மகள்களையும் நன்கு படிக்க வைத்து வந்துள்ளனர். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்று தெரிகிறது. அதீத பக்தியின் மூலம் அதிசயம் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். இதனால், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆயுள் கூடும் என்று நம்புவதாக கூறியுள்ளனர். தங்கள் மகள் மீண்டும் இறக்கவில்லை. ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :